செவ்வாய், 13 செப்டம்பர், 2016

ICT - RESOURCE PERSONS TRAINING 08.09.2016 & 09.09.2016

ICT கருத்தாளர்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டை  மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் மாவட்ட அளவிலான ICT கருத்தாளர் பயிற்சி புதுக்கோட்டை கேப்பரை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 08.09.2016 & 09.09.2016 ஆகிய இரண்டு நாட்கள்  நடைபெற்றது .

தொடக்க விழா .

 பயிற்சியின் தொடக்கவிழா திட்டத்தின் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி . பழனிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது . வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு கதிரேசன் அவர்கள் தாளாளர் திரு PS கருப்பையா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . 

ஒவ்வொரு பாடத்திற்கும் 10 ஆசிரியர்கள் வீதம் 50 கருத்தாளர்கள் இப்பயிற்சியில்  கொண்டனர் 

முன்னதாக மைய பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு   ராஜு அவர்கள் அனைவரையும் வரவேற்க திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம் நன்றி கூறினார் .

ADPC திரு   சி. பழனிவேலு  அவர்கள்  தலைவருக்கு  போர்த்துகிறார் 

கருத்தாளர்கள் 


 தலைவர் திரு கதிரேசன் அவர்கள் உரையாற்றுகிறார் 




முதல் நாள் 08.09.2016
-------------------------------

பயிற்சியின் முதல் நாள்
1) Introduction of ICT Hardware and Software
2)Gimp photo story Audacity, Format .Factory
3) Libre office &  NHM writer & converter
 4) Hands on practice on trained Software& Content creation  ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது 

 






பயிற்சியின் இரண்டாம் நாள் 
1) Content Presentation & Internet Usage 2)Video Editing 
3) Subject Specific Software Websites (TVA Free mind ) 
4) Evaluation tools 
ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது 







முதன்மைக் கருத்தாளர்கள்  

மாநிலக் கருத்தாளர் திரு ராஜ்மோகன் , முதன்மைக் கருத்தாளர்கள் திரு   கஸ்தூரி  ரெங்கன் (ஆங்கிலம் ) , திரு சி. குருநாதசுந்தரம் (தமிழ் )திரு சுப்பிரமணியன் (கணிதம் )திரு ஜம்புகேஸ்வரன் (அறிவியல் )திரு நாகராஜ் (சமூக அறிவியல் )ஆகியோர் பயிற்சியளித்தனர் `

புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராஜு அவர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு பயிற்சியை செவ்வனே நடத்தினார் .





பத்திரிகை செய்திகள் 








சனி, 3 செப்டம்பர், 2016

ARIAL MATHS -RAA - ZONAL LEVEL MASTER RESOURCE PERSON TRAINING 16-17

ARIAL கணிதம் - மண்டல அளவிலான முதன்மைகருத்தாளர் பயிற்சி .30.08.2016& 31.08.2016
---------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் மூலம் மண்டல அளவிலான ARIAL கணித முதன்மைக் கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி புதுக்கோட்டை சத்தியமங்கலம் சுதர்சன்   பொறியியல் கல்லூரியில் 30.08.2016 & 31.08.2016 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற்றது . 

தொடக்கவிழா 

பயிற்சியின்  தொடக்கவிழாவில்  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி செ . சாந்தி அவர்கள் தலைமை ஏற்று பயிற்சியை தொடக்கிவைத்தார் . கல்லூரியின் முதல்வர் டாக்டர் கணேசன் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . முன்னதாக திட்டத்தின் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு அனைவரையும் வரவேற்க கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார் . பயிற்சியில் புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 59 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் 




 முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்
சுதர்சன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாகடர் கணேசன் அவர்கள் குத்துவிளக்கேற்றுகிறார் 

திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு குத்து விளக்கேற்றுகிறார் 

பங்கேற்பாளர்கள் 



பத்திரிக்கைச் செய்திகள்