சனி, 19 நவம்பர், 2016

மண்டல அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் பாட கருத்தாளர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலம் மண்டல அளவிலான கணித மற்றும் அறிவியல் பாட கருத்தாளர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது , 

10.11.2016 முதல் 12.11.2016 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் புதுக்கோட்டை , திருச்சி , சிவகங்கை கரூர் மாவட்டங்களை சேர்ந்த 40 கணித கருத்தாளர்களும் 4.0அறிவியல் கருத்தாளர்களும் கலந்து கொண்டனர் . 

தொடக்கவிழா 

இப்பயிற்சிப் பணி மனையின்  தொடக்கவிழா புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி செ  சாந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது .