செவ்வாய், 29 மார்ச், 2016

TRAINING FOR TEACHER MENTORS ( SOCIAL SCIENCE) DAY 6

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமூக அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியின் 6 ஆம் நாள் நிகழ்வுகள் .மையம் ; அரசு உயர்நிலைப்பள்ளி காந்தி நகர் புதுக்கோட்டை .

அமர்வு 1
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் முன்னாள் துறைத் தலைவர் திரு விஸ்வ நாதன் அவர்கள் மக்களாட்சி முறையும் மக்களாட்சி அமைப்புகளும் என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்

திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா வல்லுனரை அறிமுகப்படுத்தி பேசிய போது .....

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு ரெங்கராஜ் அவர்கள் அரசியல் அறிவியல் பாடத்தை கற்பிப்பது குறித்து தெளிவான விளக்களோடு ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார் 

அமர்வு 3 
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியர் திரு கருப்பையா அவர்கள் MONEY AND CREDIT என்ற தலைப்பில் பணம் குறித்த பல அரிய தகவல்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார் 










திங்கள், 28 மார்ச், 2016

RAA- INAUGURATION GHSS ILUPPUR WITH MOTHER TERESA COLLEGE ARTS & SCIENCE ILUPPUR

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் சார்பாக நடத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுடன் அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ் இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியை  இலுப்பூர் மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரியோடு இணைக்கும் தொட க்கவிழா 24.03.2016 அன்று நடைபெற்றது

 தலைமை ஆசிரியர் திரு பிரபாகரன் அவர்கள் கல்லூரியின் தமிழ் துறைப் பேராசிரியர் முனைவர் புகழேந்தி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்கிறார் .


பேராசிரியர் புகழேந்தி அவர்கள் திட்டம் குறித்து பேசுகிறார் 

.

திங்கள், 21 மார்ச், 2016

MENTOR TRAINING -SOCIAL SCIENCE - DAY 1 ( 14.03.2016)

அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுக அறிவியல்  வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டை
 காந்திநகர் அரசு உயர்நிலை பள்ளி மையத்தில் 14.03.2016 அன்று தொடக்கப்பட்டது .பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராசு அவர்கள் தலைமைஏற்று தொடக்கி வைத்தார் . 
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் பயிற்சியின்   பற்றி விளக்கி கூறினார் .
 ஆர்வமுடன் பங்கேற்ற ஆசிரியர்கள் 


அமர்வு 1
கருத்தாளர் திரு பொன் தங்கராஜ் அவர்கள் வரலாறு கற்பித்தல் என்ற தலைப்பில் கற்பித்தல் முறைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார் .





     

INDUCTION TRG 2015-16 - PARTICIPANTS LIST


1. திரு கணபதி சுப்ரமணியம்  - அறிவியல் -அ மே நி பள்ளி -தாஞ்சூர்
2. திருமதி  அகிலா பர்வின்   - தமிழ் -அ மே நி பள்ளி -தாந்தாணி 
3.செல்வி முகைதீன் ஆபிதா - கணிதம் -அ உ நி பள்ளி அரசர்குளம்  
4.ஓ. சனோ பாத ஸ்லிம் -ச.அறிவியல்- அ உநி பள்ளி - எருக்கலகோட்டை
5.க.அன்பு -அறிவியல் -அ உ நி பள்ளி -பள்ளத்தி விடுதி   
6.வெ . சுதா பிரியா -ஆங்கிலம் - அ உ நி பள்ளி கே வி கோட்டை 
7. திரு தெய்வேந்திரன் -அறிவியல் அ உ நி பள்ளி - மங்கள நாடு கி 
8. ஜி .மகா லக்ஷ்மி - அறிவியல் மோலுடையான்பட்டி 
9 ஜி. ஈஸ்வரி -அறிவியல் -அ உ நி பள்ளி நற்பவள  செங்கமாரி 
10 ந. கங்கா கணிதம் அ உ நி பள்ளி ஒக்கூர் 
11. எஸ். பிரதிபா - அறிவியல் - அ உ நி பள்ளி பெரியலூர் 
12. திரு ப. மாரிமுத்து சமுக அறிவியல் அ உ நி பள்ளி பெருங்குடி 
13. திருமதி கோமதி சமுக அறிவியல் அ உ நி பள்ளி ஆயின்குடி 

INDUCTION TRG FOR NEW BT TEACHERS

அனைவருக்கும் இடை நிலை கல்வித் திட்டம் சார்பாக நடைபெற்ற புதிய ஆசிரியர்களுக்காக புத்தாக்கப் பயிற்சியின் 10 ஆம் நாள் நிகழ்வுகள் 
அமர்வு 1
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கருப்பையன் அவர்கள் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு பள்ளி வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகளை பயன்படுத்தி பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்துகொள்வது குறித்து பயிற்சியளித்தார் .









அமர்வு 2 
புதுக்கோட்டை மாவட்டகல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் திரு மாரியப்பன் அவர்கள் குழந்தைநேயபள்ளி என்ற தலைப்பில் மாணவர்களிடம் காட்ட வேண்டிய ஈடுபாட்டினை குறித்து நன்முறையில் ஆசிரியர்களை தூண்டும் வண்ணம் எடுத்துரைத்தார் .

அமார்வு 3
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா அவர்கள் பள்ளி நிர்வாகத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் சார்ந்த விவரங்களை எடுத்துரைத்தார் .


அமர்வு 4
NATIONAL SKILL QUALIFICATION FRAME WORK - NSQF தொடர்பாக மத்தியப்பி ர தேசம் போபாலில் உள்ள PSSCIVE நிறுவனத்தின் பயிற்சியில் கலந்து கொண்டு வந்துள்ள அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யின் ஆசிரியர் திரு ரஞ்சித் குமார் அவர்கள் ஒன்பதாம் நிலையில் தொடங்கப் படவிருக்கும்  தொழிற் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு  தெளிவாக எடுத்துரைத்தார் .




நிறைவு நிகழ்வாக அருள்மிகு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் பயிற்சியின் நிறைவு விழா நடந்தது . பங்கேற்பாளர்களின் பின்னுட்டத்திற்கு  பின் மதிப் பூதியம் மற்றும் வருகைச்சான்று ஆகியவற்றை தலைமை ஆசிரியர் திரு எஸ். ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார் .








வியாழன், 17 மார்ச், 2016

INDUCTION TRG FOR NEW BT TEACHERS 9

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற புதிய ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் 9 ஆம் நாள் நிகழ்வுகள்
அமர்வு 1
திரு பொன் கருப்பையா அவர்கள் முதலுதவிப் பயிற்சியில் விபத்துக்குள்ளானவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தொடர்பான ஒரு கை இருக்கை , இரு கை இருக்கை முறை ஆகியவற்றை செயல் முறை விளக்கங்களோடு அளித்தார் .

அமர்வு 2 
திட்டத்தின் மன்ற செயல்பாடுகள் குறித்து தமிழாசிரியர் திரு குருநாதசுந்தரம் அவர்கள் தெளிவாகப் பயிற்சியளித்தார் 
மேலும் POWER POINT PRESENTATION தயாரிப்பது குறித்தும் அவர் பயிற்சியளித்தார் 

திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசி .பன்னீர்செல்வன் படைப் பிலக்கியம் குறித்தும் மாணவர்களின் படைப்பார்வத்தை  தூண்டும் வகைகளையும் சிறந்த எடுதுகாட்டுகளுடன் கூறினார் 






புதன், 16 மார்ச், 2016

INDUCTION TRG FOR NEW BT TEACHERS DAY 8

அனைவருக்கும் இடை நிலைகல்வித்  திட்டம் சார்பாக நடை பெற்ற புதிய ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் 8 ஆம் நாள் நிகழ்வுகள் (.12.03.2016)
அமர்வு 1
எதிர் வரும் மே மாதத்தில் நடத்த வேண்டிய சேர்க்கைப் பேரணி குறித்தும் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராசி . பன்னீர்செல்வன்  (பன்னீர்செல்வன் அதிபா ) அவர்கள் அரசுப்  பள்ளிகளின் சேர்க்கைக்காக  தான் எழுதி இயக்கிய "இது எங்க பள்ளிக் கூடம் "என்ற குறும்படத்தை திரையிட்டு சேர்க்கையின் அவசியத்தை விளக்கி பேசினார் .



அமர்வு 2
பொதுத் த்தேர்வுகளில் 100 % பெறுவதற்குரிய வழிமுறைகள் குறித்து கருத்தாளர் திரு பூமி நாதன் அவர்கள் தெளிவாக நிறைய CASE STUDY களோடு பயிற்சியளித்தார் `
அமர்வு 2 SECOND PART
கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி அவர்கள் தேசியத் திறனாய்வுத் தேர்வு குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார் 
அமர்வு 3
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி    நிறுவன விரிவுரையாளர் திருமதி அஜித் ஜெயா  அவர்கள் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (ஆங்கிலம் ) குறித்து விரிவாக பயிற்சியளித்தார் 
அமர்வு 4
திட்டத்தின் முன்னாள் ADPC முனைவர் ஆர் . கனகசபாபதி சிறந்த ஆசிரியருக்கான குணாதிசியங்கள் என்ற தலைப்பில் தன்அனுபவங்களோடும் சிறந்த எடுத்துக் காட்டுகளோடும் பயிற்சியளித்தார் 









சனி, 12 மார்ச், 2016

வெள்ளி, 11 மார்ச், 2016

INDUCTION TRG FOR NEW BT TEACHERS DAY 7

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் 7 ஆம் நாள் நிகழ்வுகள் (11.03.2016)
அமர்வு 1 
பள்ளி இளையோர் செஞ்சிலுவை சங்க நடைமுறைகள் குறித்து JRC அமைப்பாளர் திரு ராஜேஷ் ஸ்ரீநிவாஸ் பயிற்சியளித்தார் . சங்கத்தின் அனைத்து நடைமுறைகளைப் பற்றியும் குருதி கொடை முதலுதவி ஆகியவை குறித்தும் தெளிவாக விளக்கமளித்துப் பேசினார்
அமர்வு 2 
சாரணர் படை அமைப்பாளர் திரு சிவராஜா அவர்கள் சாரண வரலாறு , சேவை மனப்பான்மையை மாணவர்களிடத்தே வளர்த்தல் ஆகியவை குறித்தும் முகாம் வாழ்வு குறித்தும் பயிற்சியளித்தார் .
அமர்வு 3
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் RMSA குறிக்கோள்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்தும் KALA UTSAV போட்டிகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார் 

கவனத்துடன் பங்கேற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்கள் 

பதிவாகும் பயிற்சிக் குறிப்புகள் 
அமர்வு 4 
புதுக்கோட்டை மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ( DIET ) விரிவுரையாளர் திரு தனசேகரன் அவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு CCE குறித்து POWER POINT PRESENTATION உடன் பயிற்சியளித்தார் .





INDUCTION TRG FOR NEW BT TEACHERS DAY 6

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டதின் சார்பாக நடைபெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் 6 ஆம் நாள் நிகழ்வுகள் (10.03.2016)
அமர்வு 1
புதுக்கோட்டையின் புகழ்பெற்ற முன்னணி பல் மருத்துவர் திரு நா. ஜெயராமன் அவர்கள் பொதுச்  சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பான பல பயனுள்ள விளக்கங்களை தெளிவாக வழங்கினார் . மனித உடல் நலத்தின் முதல் எதிரியான கொசுக்களின் உற்பத்தியை எவ்வாறு நாமே அதிகரிக்கிறோம் என்பதை பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்தார் . சுகாதாரம் குறித்து தீவிரமான விழிப்புணர்வை அவரது உரை ஏற்படுத்தியது .
பங்கேற்பாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் தெளிவான பதிலளித்தார்




அமர்வு 2
மொழியியல் வல்லுநரும் கவிஞரும் ஒய்வு பெற்ற தமிழாசிரியருமான் திரு நா. முத்துநிலவன் அவர்கள் "பிழையில்லாத்  தமிழ்' என்ற தலைப்பில்  பல்வேறு ஊடகங்களின் செய்திகளில் தோன்றுகிற எழுத்துப் பிழைகள் சுட்டிக் காட்டி விளக்கமளித்து பயிற்சியளித்தார் .



அமர்வு 3
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு க. ராஜா அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகளை இணைக்கும் RAA திட்டம் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார் .


அமர்வு 4.
இந்த முதலுதவிப் பயிற்சிஅமர்வில்  கட்டுகள் மற்றும் உயிர் காக்கும் முடிச்சுகள் குறித்து முதலுதவி பயிற்சியாளர் பாவலர் பொன் .கருப்பையா அவர்கள் பயிற்சியளித்தார் .
முதலுதவி பயிற்சியாளர் பொன் கருப்பையா அவர்களுடன் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் 
தலையில் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னால் கட்டுப் போட வேண்டிய முறை பற்றி செயல்முறை விளக்கம்  

பல்வேறு வகையான உயிர் காக்கும் முடிச்சு வகைகளை பங்கேற்பாளர்களை போடச் செய்தார் 

கையில் அடிபட்டவருக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னால் கட்டுப் போட வேண்டிய முறை பற்றி செயல்முறை விளக்கம்