வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

BEST PRACTICES IN SCHOOLS

ஊரகப்பகுதி அரசுப்பள்ளியில் புரவலர் நன்கொடையில் ICT வசதி
--------------------------------------------------------------------------------------------------------
2009-10 ஆண்டில் திட்டத்தால் தரமுயர்த்தப் பட்ட குழந்தை விநாயகர் கோட்டை உயர்நிலைப்பள்ளி புதுக்கோட்டை ஆலங்குடி முக்கிய சாலையிலிருந்து  விலகிச்செல்லும் ஊரகச் சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . பேருந்து வசதி இல்லாத உள்ளடங்கிய இந்த கிராமத்தில் உள்ள இப்பள்ளியில் LCD PROJECTOR மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகிறது . இந்த உபகரணங்கள் புதுக்கோட்டையில் உள்ள மாமலர் மருத்துவ மனை நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது . கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் 10.02.2017 அன்று இப்பள்ளியை பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட படம் .இப்பள்ளியில் பத்தாம் நிலை மாணவர்களுக்கான  சிறப்பு வகுப்புகள் மாலை லை 4.30 முதல் 6.00 மணி வரையும் காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரையும் நடைபெற்று வருகின்றன . இவ்வகுப்புகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி தலைமை ஆசிரியரால் ஊர் பொது மக்களாலும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது 

புதன், 8 பிப்ரவரி, 2017

BEST PRACTICES IN SCHOOLSபுதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் நிலை மாணவர்களுக்கான காலை நேர சிறப்பு வகுப்புகள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அம் மாணவர்களுக்கு தினமும் காலை நேரச் சிற்றுண்டி பொது மக்களால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.YOGA COMPETITION 2016-17

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும்  இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் 31.01.2017 அன்று புதுக்கோட்டை வைரம்ஸ்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது . 16  பள்ளிகளில் இருந்து  53 மாணவர்கள்  கொண்டனர் .
செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

அரசுப்பள்ளி மாணவிகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும்  இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் அரசுப்பள்ளி  மாணவிகளுக்கான தற்காப்புக் கலை  பயிற்சி மாவட்டத்தின் 36 உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்று வருகிறது . அப்பயிற்சியின் நிகழ்வுப் பதிவுகள்

அரசு உயர்நிலைப்பள்ளி பெருங்காடு
==================================

அரசு உயர்நிலைப்பள்ளி குடுமியான்மலை
=======================================

அரசு உயர்நிலைப்பள்ளி வைத்தூர்
================================


அரசு உயர்நிலைப்பள்ளி கல்குடி
=============================
நகராட்சி உயர்நிலைப்பள்ளி திருவப்பூர்  
==================================
அரசு உயர்நிலைப்பள்ளி பாலன் நகர்
==================================