புதன், 28 ஜூன், 2017

மண்டல அளவிலான சமூக அறிவியல் கருத்தாளர் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பில் மண்டல அளவிலான சமூக அறிவியல் கருத்தாளர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது .

19.07.2017 முதல் 23,06,2017 வரை 5 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 101 கருத்தாளர்களும் 24 ஆசிரிய பயிற்றுனர்களும் 12 முதன்மைக்கருத்தாளர்களும் கலந்து கொண்டனர்

தொடக்கவிழா 

19.07.2017 அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் பயிற்சியின் தொடக்கவிழா நடைபெற்றது . முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு முனைவர்  எஸ் செந்திவேல் முருகன் தலைமைஏற்று விழாவினை தொடக்கி வைத்தார் .

அவர் பேசுகையில்
 " நான் எனது போட்டித்தேர்வினை எழுதும் போது சமூக அறிவியலில் நான்  தயாரித்து வைத்திருந்த பகுதிகளே நேர்முக தேர்வில் வெற்றியடைய உதவின . சமூக அறிவியல் ஆசிரியர்கள்தான் சமூக மனப்பான்மையை மாணவர்களிடையே வளர்க்க முடியும் . மாணவர்கள் பலர் ஏழ்மையான நிலைமையில் இருந்து வருகிறார்கள் அவர்கள் வாழ்வில் வெற்றி அடைவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும் . மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்து வந்தவன் நான் . என் வீட்டின் நிலைப்படியில் குனிந்து நான் வாங்கிய இடி தான் என்னை நிமிரவைத்தது . இங்கு என் பெயரைவிட என் படிப்பு மிக நீளமாக இருக்கிறது என கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  பன்னீர்செல்வன் பேசுகையில் குறிப்பிட்டார் .

என் தந்தையார் எனக்கு ஜாதகம் பார்த்தபோது இவன் ஜாதகப்படி இவனுக்கும் படிப்பு கிடையாது எந்தவொரு பட்டமும்  வாங்கமுடியாது .என்று கூறினார் அக்கூற்றை பொய்யாக் கிட வேண்டுமென்றுதான் நான் நிறைய பட்டங்களை  பெற்றேன்  ஆகவே  மூடப் பழக்கங்களுக்கு எதிராக ஆசிரியர்கள் பாடுபடவேண்டும் " என்று பேசினார்


-----------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திரு மா  .தமிழ்செல்வன் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தி பேசினார் 


---------------------------------------------------------------------------------------------------------------

விழாவில் கவிஞர் நா முத்துநிலவன் அவர்கள் கலந்து கொண்டு செறிவான வரலாற்று தகவல்களோடு சிறப்புரை ஆற்றினார் 
--------------------------------------------------------------------------------------------------------------------
\
முன்னதாக திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார் 
----------------------------------------------------------------------------------------------------------------
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராசி பன்னீர்செல்வன் அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கினார் 

------------------------------------------------------------------------------------------------------------------

திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு க ராஜா அவர்கள் முடிவில் நன்றி கூறினார் 
-------------------------------------------------------------------------------------------------------------------------

விருந்தினர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த இனிய தருணம் 
கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் விருந்தினர்கள் 
-----------------------------------------------------------------------------------------------------