ARIAL கணிதம் - மண்டல அளவிலான முதன்மைகருத்தாளர் பயிற்சி .30.08.2016& 31.08.2016
---------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் மூலம் மண்டல அளவிலான ARIAL கணித முதன்மைக் கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி புதுக்கோட்டை சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் 30.08.2016 & 31.08.2016 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற்றது .
தொடக்கவிழா
பயிற்சியின் தொடக்கவிழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி செ . சாந்தி அவர்கள் தலைமை ஏற்று பயிற்சியை தொடக்கிவைத்தார் . கல்லூரியின் முதல்வர் டாக்டர் கணேசன் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . முன்னதாக திட்டத்தின் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு அனைவரையும் வரவேற்க கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார் . பயிற்சியில் புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 59 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List