புதன், 4 மே, 2016

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநிலப் பார்வையாளர் ஆய்வு - 03.05.2016 & 05.05.2016

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அனைவருக்கும்  இடைநிலைக் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகள்  , மாற்றுதிறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வியின் IEDSS செயல்பாடுகள் ,மற்றும்கட்டிடக் கட்டுமானப் பணிகள ஆகியவற்றை மாநில உதவி ஒருங்கிணைப்பாளர் திருமதி சித்ரா அவர்கள் பார்வையிட்டார்(03.05.2016 )

அவர் அரசு உயர்நிலைப்பள்ளி வாகவாசல் , நகராட்சி உயர்நிலைப்பள்ளி திருவப்பூர் , அரசு உயர் நிலைப்பள்ளி திருக்கோகர்ணம் ,அரசு ராணியார்  மகளிர் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை , அரசு உயர்நிலைப்பள்ளி கொத்தக்கொட்டை , அரசு மேல்நிலைப்பள்ளி திருவரங்குளம் , அரசு உயர்நிலைப் பள்ளி கே .ராசியமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி சூரன் விடுதி  ஆகிய பள்ளிகளின் புதிய கட்டிட கட்டுமானப்  பணிகள் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வித்திட்டத்தின் (IEDSS ) செயல்பாடுகள் மற்றும் RMSA திட்டப்பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்கள் . மாநிலப் பார்வையாளர் திருமதி சித்ரா அவர்களை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமைஆசிரியர் சங்க மாநிலத்தலைவரும் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான திரு சாமி சத்தியமூர்த்தி அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் .


அரசு உயர்நிலைப்பள்ளி கொத்தகொட்டை -இப்பள்ளியில் நிறைவுற்றிருக்கிற கூடுதல் கட்டிடப் பணிகளை மாநிலப் பார்வையாளர்  பார்வையிட்டார் 
----------------------------------------------------------------------------------------------------------------------

அரசு உயர்நிலைப்பள்ளி கே ராசிய மங்களம்  -இப்பள்ளியில்  நடைபெற்றுவரும் புதிய கட்டிட க் கட்டுமானப் பணிகளை பார்வையாளர் பார்வையிட்டார் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
 புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடப் பணிகள் ,அப்பள்ளியில் திட்டமிடப்பட்டுள்ள IEDSS மாதிரி வள மையத்திற்கான வகுப்பறை ஆகியவற்றை மாநில உதவி ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டார். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அருமைக்கண்ணு , திட்டப் பொறியாளர் திரு கணபதி ஆகியோர் .
-----------------------------------------------------------------------------------------------------------------------


திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் IEDSS மாதிரி வள மையத்திற்கான வகுப்பறை பார்வையிடப்பட்டது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
அரசு உயர்நிலைப்பள்ளி சூரன் விடுதி - 2011-12 ஆண்டில் தரமுயர்த்தப்பட்ட இப்பள்ளியில் நடைபெறும் புதிய கட்டுமான பணிகளை பார்வையிட்டபோது 
--------------------------------------------------------------------------------------------------------------------------
அரசு உயர்நிலைப்பள்ளி  கே ராசியமங்கலம் - 2011-12 ஆண்டில் தரமுயர்த்தப்பட்ட இப்பள்ளியில் நடைபெறும் புதிய கட்டுமானப்  பணிகளை பார்வையிட்டபோது ......உடன் திட்டப் பொறியாளர் திரு க.முத்தமிழ் குமரன் 
----------------------------------------------------------------------------------------------------------------------


நகராட்சி  உயர்நிலைப்பள்ளி  திருவப்பூர், புதுக்கோட்டை  - 2011-12 ஆண்டில் தரமுயர்த்தப்பட்ட இப்பள்ளியில் நடைபெறும் புதிய கட்டுமானப்  பணிகளை உதவி ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டபோது ......திட்டப் பொறியாளர் திரு TP கணபதி ,பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அ .மணவாளன் ஆகியோர் உடன் உள்ளனர் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை பார்வையிட்டபோது ... உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சரஸ்வதி அவர்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
05.05.2016 அன்று மாநில உதவி ஒருங்கிணைப்பாளர் திருமதி சித்ரா அவர்கள் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலத்தில் பராமரிக்கப்படும் அனைத்துவகை பதிவேடுகளையும் பார்வையிட்டார் .-திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி  ஜெ .ராதிகா ராணி பிரசன்னா மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் உள்ளனர் .


-
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List