வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

School Leadership Development Programme 2016-17

தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டுப் பயிற்சி
(முதல் கட்டம் 01.08.2016 முதல் 05..08.2016 வரை 5 நாட்கள் )

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டுப் பயிற்சி லேனா விளக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது .
இப்பயிற்சியில் 30 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

தொடக்க விழா 

முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி செ .சாந்தி அவர்கள் தலைமையேற்று தொடக்கி வைத்தார்கள் .

தொடக்கவிழாவில் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி ராதிகாராணி பிரசன்னா கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு சி. பன்னீர்செல்வம் ,திரு க. ராஜா பயிற்றுநர்கள் திருமதி ஜெயந்தி , திருமதி லட்சுமி மைய ஒருங்கிணைப்பாளர் திரு மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர் .


முதல் நாள் -அமர்வு 1&2
சென்னை திட்பம் உளவியல் நிறுவன நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் 16 வகையான உளவியல் நடவடிக்கைகள் குறித்த விரிவான பயிற்சியை அளித்தார்கள் . தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு உளவியல் உணர்வுகளுக்கும் ROLE PLAY செய்து காண்பித்தது சிறப்பாக இருந்தது .
அமர்வு 3
பயிற்சியின் கருத்தாளர் திருமதி ஜெயந்தி அவர்கள் PERSPECTIVE OF SCHOOL LEADERSHIP தலைப்பில் இப்பயிற்சியின் நோக்கங்கள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார் .
அமர்வு 4
பயிற்சியின் கருத்தாளர் திருமதி லட்சுமி அவர்கள் ஆசிரியர் கூட்டங்கள் பற்றி சிறப்பாக பயிற்சியளித்தார் . 

இரண்டாம் நாள் 
அமர்வு  1&2 
 மாநிலக் கருத்தாளர் திரு முனிராமையா அவர்கள் SCHOOL AS A LEARNING ORGANISATION என்ற பொருளில் நேர்த்தியாக பயிற்சியளித்தார் . தலைமை ஆசிரியர்கள் இவ்வகுப்புகளில் உற்சாகமாக பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List