வியாழன், 1 செப்டம்பர், 2016

IEDSS - TRAINING FOR TEACHER MENTORS 16-17

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வழிகாட்டுதலில் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி 22.08.2016 & 23.08.2016
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலம் மாற்று திறனாளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் சார்ந்த பாட ஆசிரியர்களுக்கான பயிற்சி புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது 

தொடக்கவிழா 
இப்பயிற்சியின் தொடக்கவிழாவில் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திரு உ பரமசிவம் அவர்கள் தலைமை தாங்கி தொடக்கிவைத்தார் 
திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பழனிவேலு கல்வி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் . 
முன்னதாக பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு எஸ். ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்க கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா நன்றி கூறினார் .

தொடக்கவிழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் உ பரசிவம் அவர்களுக்கு அருள்மிகு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு எஸ் ராஜேந்திரன் அவர்கள் பொன்னாடை அணிவிக்கிறார் 


(தொடக்கவிழாவில் மாவட்டக்கல்வி அலுவலர் உ .பரமசிவம் அவர்கள் பேசுகிறார் அருகில் திட்டத்தின் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு கல்விமாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம் தலைமை ஆசிரியர் திரு எஸ். ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர் .)

வழிகாட்டுதல்பயிற்சி 

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நல அலுவலர் திரு சரவணகுமார் உதவி அலுவலர் திரு  வசந்தகுமார் சிறப்பாசிரியர்கள் திருமதி சி . பூமயில், செல்வி  லீலா கருத்தாளர் திருமதி மங்கையர்க்கரசி திரு ஜோசப் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சியளித்தனர் . 

IEDSS திட்டம் குறித்த விவரங்கள் , இயலாமையின் வகைகள் , வகுப்பறைச்சூழலில் உள்ளடக்கிய கல்வியை வழங்குதல் தொடர்பான திட்டம் , மாற்று திறனாளி மாணவர்களுக்கு உள்ள கற்றல் சவால்கள் , , மாற்று திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் மத்திய மாநில அரசுகளின் உதவிகள் . சிறப்பு கற்றல் மையங்கள் ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது .
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பன்னீர்செல்வம் பயிற்சி குறித்து விளக்கினார் 

சிறப்பாசிரியர் திருமதி பூமயில் IEDSS திட்டம் குறித்து விரிவாக பயிற்சியளித்தார் 

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல உதவி அலுவலர் திரு வசந்த குமார் இயலாமையின் வகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் 
கருத்தாளர் திருமதி மங்கையற்கரசி IEDSS உள்ளடக்கிய கல்வியின் திட்டமிடல் தொடர்பான பயிற்சியினை அளித்தார் 



பங்கேற்பாளர்கள் 

இப்பயிற்சியில் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 45 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .





பத்திரிகைச்செய்திகள் 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List