அனைவருக்கும் இடை நிலை கல்வித் திட்டம் சார்பாக நடைபெற்ற புதிய ஆசிரியர்களுக்காக புத்தாக்கப் பயிற்சியின் 10 ஆம் நாள் நிகழ்வுகள்
அமர்வு 1
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கருப்பையன் அவர்கள் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு பள்ளி வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகளை பயன்படுத்தி பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்துகொள்வது குறித்து பயிற்சியளித்தார் .
அமர்வு 2
புதுக்கோட்டை மாவட்டகல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் திரு மாரியப்பன் அவர்கள் குழந்தைநேயபள்ளி என்ற தலைப்பில் மாணவர்களிடம் காட்ட வேண்டிய ஈடுபாட்டினை குறித்து நன்முறையில் ஆசிரியர்களை தூண்டும் வண்ணம் எடுத்துரைத்தார் .
அமார்வு 3
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா அவர்கள் பள்ளி நிர்வாகத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் சார்ந்த விவரங்களை எடுத்துரைத்தார் .
அமர்வு 4
NATIONAL SKILL QUALIFICATION FRAME WORK - NSQF தொடர்பாக மத்தியப்பி ர தேசம் போபாலில் உள்ள PSSCIVE நிறுவனத்தின் பயிற்சியில் கலந்து கொண்டு வந்துள்ள அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யின் ஆசிரியர் திரு ரஞ்சித் குமார் அவர்கள் ஒன்பதாம் நிலையில் தொடங்கப் படவிருக்கும் தொழிற் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார் .
நிறைவு நிகழ்வாக அருள்மிகு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் பயிற்சியின் நிறைவு விழா நடந்தது . பங்கேற்பாளர்களின் பின்னுட்டத்திற்கு பின் மதிப் பூதியம் மற்றும் வருகைச்சான்று ஆகியவற்றை தலைமை ஆசிரியர் திரு எஸ். ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List