புதன், 9 மார்ச், 2016

INDUCTION TRAINING FOR NEW BT TEACHERS DAY 5

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பாக நடத்தப்பட்ட புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் 5 ஆம் நாள் நிகழ்வுகள்
அமர்வு 1
முதல் அமர்வில் பிழையில்லாத் தமிழ் என்ற தலைப்பில் தவறின்றி தமிழ் எழுதுவது குறித்து மொழியியல் வல்லுநர் முத்துநிலவன் அவர்கள் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு தெளிவாகபதிலளித்து  பயிற்சியளித்தார்


ஒரே எழுத்துக்கு அது வரும் இடத்திற்கேற்ப உச்சரிப்பு மாறுவதை மிக அழகாக எடுத்துகாட்டுகளோடு விளக்கினார் 

-----------------------------------------------------------------------------------------------------------------------
அமர்வு  2
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்  செயலாளர் திரு எஸ். டி பாலகிருஷ்ணன் எளி ய அறிவியல் பரிசோதனைகளை அதற்குரிய அறிவியல் பூர்வமான விளக்கங்களோடு செய்து காட்டினார் 

ஆர்வமுடன் காற்று உராய்வு சோதனையை தாள் மடிப்பில் செய்யும் பங்கேற்பாளர்கள் 

-------------------------------------------------------------------------------------------------------------------------
அமர்வு 3
குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜெய சிங் அவர்கள் 100 சதவீத தேர்ச்சிக்கான வழிமுறைகள் பற்றி தம் பள்ளி அனுபவத்தோடு இணைத்து கூறியது பங்கேற்பாளர்கள் தாங்களும் அது போல் சாதிக்க வேண்டும் என்று தூண்டுவதாய் அமைந்தது 

------------------------------------------------------------------------------------------------------------------------
அமர்வு 4 
புதுக்கோட்டை மாவட்ட கல்வி  மற்றும் பயிற்சி நிறுவன DIET விரிவுரையாளர் திருமதி மீனாட்சி கணிதத்தில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு குறித்து பயிற்சியளித்தார் 

---------------------------------------------------------------------------------------------------------------------------







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List