வெள்ளி, 11 மார்ச், 2016

INDUCTION TRG FOR NEW BT TEACHERS DAY 6

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டதின் சார்பாக நடைபெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் 6 ஆம் நாள் நிகழ்வுகள் (10.03.2016)
அமர்வு 1
புதுக்கோட்டையின் புகழ்பெற்ற முன்னணி பல் மருத்துவர் திரு நா. ஜெயராமன் அவர்கள் பொதுச்  சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பான பல பயனுள்ள விளக்கங்களை தெளிவாக வழங்கினார் . மனித உடல் நலத்தின் முதல் எதிரியான கொசுக்களின் உற்பத்தியை எவ்வாறு நாமே அதிகரிக்கிறோம் என்பதை பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்தார் . சுகாதாரம் குறித்து தீவிரமான விழிப்புணர்வை அவரது உரை ஏற்படுத்தியது .
பங்கேற்பாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் தெளிவான பதிலளித்தார்




அமர்வு 2
மொழியியல் வல்லுநரும் கவிஞரும் ஒய்வு பெற்ற தமிழாசிரியருமான் திரு நா. முத்துநிலவன் அவர்கள் "பிழையில்லாத்  தமிழ்' என்ற தலைப்பில்  பல்வேறு ஊடகங்களின் செய்திகளில் தோன்றுகிற எழுத்துப் பிழைகள் சுட்டிக் காட்டி விளக்கமளித்து பயிற்சியளித்தார் .



அமர்வு 3
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு க. ராஜா அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகளை இணைக்கும் RAA திட்டம் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார் .


அமர்வு 4.
இந்த முதலுதவிப் பயிற்சிஅமர்வில்  கட்டுகள் மற்றும் உயிர் காக்கும் முடிச்சுகள் குறித்து முதலுதவி பயிற்சியாளர் பாவலர் பொன் .கருப்பையா அவர்கள் பயிற்சியளித்தார் .
முதலுதவி பயிற்சியாளர் பொன் கருப்பையா அவர்களுடன் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் 
தலையில் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னால் கட்டுப் போட வேண்டிய முறை பற்றி செயல்முறை விளக்கம்  

பல்வேறு வகையான உயிர் காக்கும் முடிச்சு வகைகளை பங்கேற்பாளர்களை போடச் செய்தார் 

கையில் அடிபட்டவருக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னால் கட்டுப் போட வேண்டிய முறை பற்றி செயல்முறை விளக்கம்  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List