மாற்றுத் திறன் மாணவர்களுக்கான வழிகாட்டுதலில்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலம் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான வழிகாட்டுதலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி 22.08. 2016 & 23.08`2016 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப் பட்டது .
தொடக்கவிழா
புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் திரு உ பரமசிவம் அவர்கள் கலந்துகொண்டு தொடக்கிவைத்தார்
தொடக்கவிழாவில் திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு சி. பழனிவேலு அவர்கள் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் அவர்கள் பள்ளித்துணை ஆய்வர் திரு ஜெயராமன் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
ADPC திரு சி பழனிவேலு அவர்கள் வாழ்த்துரை
பள்ளித்துணை ஆய்வர் திரு ஜெயராமன் அவர்கள் வாழ்த்துரை
கல்விமாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா நன்றியுரை
தலைமை ஆசிரியர் திரு எஸ் ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் பயிற்சி
குறித்த விளக்கவுரை
பங்கேற்பாளர்கள்
முதல்நாள் அமர்வு 1
முதல் அமர்வில் திட்டத்தின் சிறப்பாசிரியர் திருமதி பூமயில் அவர்கள் IDESS செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் . பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள் மாற்று திறன் குழந்தைகளின்பால் செலுத்த வேண்டிய அக்கறை குறித்து எடுத்துரைத்தார்
அமர்வு 2
மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலகத்தை சேர்ந்த திரு வசந்த் ராம் குமார் அவர்கள் குறைபாடுகளின் வகைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்
அமர்வு 3
இந்த அமர்வில் அரிமளம் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியை திருமதி மங்கையர்க்கரசி அவர்கள் பள்ளியில் மற்ற மாணவர்களோடு மாற்றுத்திறன் மாணவர்களையும் இணைத்து கற்பிப்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்
அமர்வு 4
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திரு சரவண குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலம் தொடர்பான விதிகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List