வியாழன், 22 செப்டம்பர், 2016

INSERVICE TRAINING FOR TAMIL TEACHERS PHASE -I

தமிழாசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் கட்டப்  பணியிடைப்பயிற்சி 20.09.2016 முதல் 24.09.2016 வரை
5 நாட்கள் நடைபெற்றது

மாவட்டத்தில்  இரண்டு மையங்களில் இப்பயிற்சி நடைபெற்றது . புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரி மையத்திலும் அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் இப்பயிற்சி நடைபெற்றது .

தொடக்கவிழா (புதுக்கோட்டை)
புதுக்கோட்டை கல்வி மாவட்ட பயிற்சியின் தொடக்கவிழா சிவபுரம் ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது . புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திரு உ பரமசிவம் அவர்கள் தலைமை ஏற்று பயிற்சியை தொடக்கி வைத்தார்கள் .கல்லூரியின் முதல்வர் திரு பரசுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் . திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பழனி வேலு அனைவரையும் வரவேற்க மைய பொறுப்பாளரான காந்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராஜு அவர்கள் நன்றியுரை  ஆற்றினார் .திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் தொகுத்து வழங்கினார் .













மாவட்டக் கல்வி அலுவலர் திரு உ பரசிவம் அவர்கள் தொடக்க உரை ஆற்றுகிறார்                                                                                                                                                                                 
 கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் பயிற்சியின் அமைப்பையும் நோக்கங்களையும் விளக்குகிறார்




   பங்கேற்பாளர்கள் 

பங்கேற்பாளர்கள் 

மைய பொறுப்பு  தலைமை ஆசிரியர் திரு ராஜு அவர்கள் நன்றி கூறுகிறார் 

பயிற்சி நிகழ்வுகள் -புதுக்கோட்டை -
------------------------------------------------------
முதல் நாள் 20.06.2016
முதல் நாள் GENDER SENSITISATION தலைப்பில் பயிற்சியளிக்கப்பட்டது .
முதன்மைகருத்தாளர்  திரு செந்தில் குமார் SEX AND GENDER என்ற தலைப்பில் பயிற்சியளித்தார் . 

EQUITY & EQUALITY என்ற தலைப்பில் வகுப்பு














21.09.2016& 22.09.2016

இரண்டு மற்றும் மூன்றாம் நாள் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இடைநிலைக்  க்கல்வித்திட்டம் தொடர்பான பயிற்சியளிக்கப்பட்டது  முதன் மைகருத்தாளர் திருமதி மங்கையர்க்கரசி CURRICULAM ADOPTIONஎன்ற தலைப்பில்   விளக்கினார் .
கருத்தாளர் திரு தேவேந்திரன் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து தெளிவாக விளக்கினார் .SCHEMES FOR CWSN CHILDREN 

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும்நல  அலுவலர் திரு சரவணகுமார் அவர்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்தார் 


------------------------------------------------------------------------------------------------------------------
பயிற்சியின் நான்கு மற்றும் ஐந்தாம் தினங்களில் 23.09.2016& 24.09.2016 ICT தொழில் நுட்பம் குறித்த பயிற்சி சிறப்பாக அளிக்கப்பட்டது . 
ஜெ ஜெ கலை  அறிவியல்கல்லூரியின் சிறப்பான கணினி ஆய்வகங்களில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனித்தனி கணினிகள் வழங்கப்பட்டு மிகச் சிறப்பாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது 



MCA BLOCK COMPUTER LAB CLASS A

 MCA BLOCK COMPUTER LAB NEW - CLASS B

KIM BLOCK COMPUTER LAB CLASS C

 KIM BLOCK COMPUTER LAB CLASS D




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List